கோட்சே வாரிசுகளுக்கு நேரு வாரிசுகளின் பேச்சு எரிச்சலை உண்டாக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Mk stalin rahul gandhi update

இன்றைய முக்கிய செய்திகள்: விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்வு.

மதுரையில் இருந்து சென்னை திரும்புவதற்கு சுமார் ₹700 முதல் ₹1000 என்ற வழக்கமான கட்டணம், ஜனவரி 1ம் தேதி ₹2,900 வரை உயர்வு. கோவையில் இருந்து சென்னை திரும்புவதற்கு ₹1300 என்ற வழக்கமான கட்டணம், ஜன.1ம் தேதி ₹3000 வரை உயர்வு.

நெல்லையில் இருந்து சென்னை திரும்ப சுமார் ₹2400-2700 என்ற வழக்கமான கட்டணம், ஜன.1ல் ₹3,500 முதல் ₹4,500 வரை உயர்வு.

--

புழல் ஏரிக்கு நேற்று 441 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 453 கனஅடியாக அதிகரிப்பு. சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 829 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 491 மில்லியன் கனஅடியாக உள்ளது. தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

  • சென்னை வானிலை ஆய்வு மையம்

“நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“அவர் தேர்தல் அரசியல் பேசவில்லை; கொள்கை அரசியல் பேசுவதால்தான் ஒரு சிலரால் ராகுல்காந்தி விமர்சிக்கப்படுகிறார்”- ‘மாமனிதர் நேரு’ புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“ராகுல் காந்தியின் பேச்சு ஜவஹர்களால் நேரு பேசுவது போலவே உள்ளது. நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது நடை பயணம் இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Related Posts

View all