நம் மாநிலத்தின் வளர்ச்சிதான் நம் நாட்டின் வளர்ச்சி.. மாஸ் காட்டும் மு.க.ஸ்டாலின்.. முழு விவரம்..!
சென்னை, தரமணி, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, சென்னை டைடல் பார்க்கில் ரூ. 212 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம்,
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ. 33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து,
திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூ. 76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனமும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாட்டிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும்,
நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு கணக்கெடுப்பினை (Industry 4.0 Maturity Survey)யும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.