வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள். முக.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை.

Mk stalin weather update

வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை.

--

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள தற்போதைய நிலையில், கூடுதலாக ஆட்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும், தோண்டப்பட்டுள்ள பள்ளங்களைச் சுற்றி உடனடியாக தடுப்பு வேலிகள் அமைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுத்திடுக!

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்களை பாதுகாக்க ஓபிஎஸ் வலியுறுத்தல். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையிலும், வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக ஓபிஎஸ் கண்டனம்.

தமிழகத்தில் டிசம்பர் 27ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் - முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

--

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை முதல் 15ம் தேதி வரை நடைபெறும் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு.

Related Posts

View all