உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது. உதயநிதி நடித்து சமீபத்தில் வெளிவந்த படத்திலேயே இந்த படம் தான் அதிக எதிர்பார்ப்புடன் வருகிறது. மகிழ் திருமேனி என்றாலே வித்தியாசம் தான். இதில் என்ன விதியசம் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நாளை நவம்பர் 18 ஆம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘கலகத் தலைவன்’.
மகிழ் திருமேனி படம் என்றாலே கொஞ்சம் ரத்தம் அதிகமாக இருக்கும். இந்த படத்தின் ட்ரைலர் பார்த்தபோதே தெரிந்தது, இந்த படத்திலும் பெரிய சம்பவம் பன்னவுள்ளனர் என்று. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிக்கிறார். நீண்ட நாள் கழிச்சு இவருக்கு ஒரு நல்ல பிரேக். இந்த படத்தில் பார்ப்பதற்கும் ரொம்ப deadly வில்லன் போல தோன்றுகிறது. படத்தின் இசையும் அந்த த்ரில் மொமெண்ட்ஸ்க்கு சரியா மேட்ச் செய்கிறது.
இந்த படத்தில் கதாநாயகி நிதி அகர்வாலுக்கு செம்ம meaty ரோல் போல, ஏனென்றால் ஒரு சில சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்களில் ஐவரும் ஒருத்தர் படத்தில். நிறைய அடி, உதய் எல்லாம் வாங்கிருப்பதாக உதய அந்த ஆடியோ லான்ச்-ல் கூட குறிப்பிட்டார்.