தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பற்றி 15 பக்க புகார் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
“பாஜக அரசு ₹15 லட்சம் கொடுப்பதாக தெரிவித்தது; ஆனால் ₹15 கூட கொடுக்கவில்லை”
பாஜக-வை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கவலையில்லை..”
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் சுமார் 1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர்; இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது, அதனால் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது
- சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
--
வகுப்புவாத வெறுப்பை தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் ஆளுநர் ரவி.
திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல, அறியாமையில் கூறப்பட்டுள்ளதும் ஆகும்.
“ஆர்.என்.ரவி தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைபட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என நிரூபித்துள்ளார்”
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
--
“நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைக் குறித்து கவலைப் பட வேண்டாம், கொள்கையில் உறுதியோடு இருப்போம்”
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
--
“தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்..”
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து!