மாஸ். தந்தை பெரியாரின் சிந்தனைகளை உலக மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடவுள்ளோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
முதலமைச்சர் முன்னிலையில், தமிழ் மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் இடையே பதிப்புரிமை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது!
கடந்த 100 ஆண்டில் சுமார் 100 புத்தகங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த 3 நாள் சர்வதேச புத்தக கண்காட்சியில் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை
- அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
“150க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் மற்ற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட உள்ளது”
“இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கவும், உலகெங்கிலும் உள்ள சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது”
“தமிழ்நாடு அரசு சார்பில் மொழிப்பெயர்ப்பு ஊக்கத்தொகையாக (Translation Grand) ₹3 கோடி வழங்கப்படும்”
“தந்தை பெரியாரின் சிந்தனைகளை, இந்திய மற்றும் உலக மொழிகள் உள்பட 21 மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட இருக்கின்றன, அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது”
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்