நீங்கள் அரசு ஊழியர், நான் மக்கள் ஊழியன் - முதல்வர் ஸ்டாலின். Full Report.
அக்டோபர் 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு.
அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்.
அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள். இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆட்சி. அரசு ஊழியர்களின் நம்பிக்கைக்கு எப்போதும் பாத்திரமாக இருப்பேன்.
தனியார் பள்ளிகளை நிர்வகிக்க தனியாக மாவட்ட கல்வி அலுவலர் இனி நியமிக்கப்படுவார்கள். தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.