வாரணாசியில் நடக்கும் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் இளையராஜா எம்.பி-உடன் பிரதமர் மோடி சந்திப்பு!
பல நூற்றாண்டுகளாக காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள ஆன்மீகப் பிணைப்பை போற்றும் வகையில் நமது ஆதீன குருமார்கள் காசி சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
காசி தமிழ் சங்கமம் துவக்க விழாவில் இன்று அவர்களை நமது பாரதப் பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.
உலகத்தின் மூத்த மொழி தமிழ் மொழி என்றும், தமிழ் மொழியை பாதுகாப்பதும், அதை மற்றவர் அறியச் செய்வதும் ஒவ்வொரு இந்தியனின் கடமை என்றும் காசி தமிழ் சங்கமம் என்ற சரித்திர நிகழ்வில் இன்று மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்தார். 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூலை பிரதமர் மோடி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் துவக்க விழாவில் இன்று வெளியிட்டார்.
தமிழ் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி! காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்பு.
Modi Speech Highlights:
காசி தமிழ் சங்கமம் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி. நமது ஆழமான வேரூன்றிய பிணைப்புகளை கொண்டாடவும், உறுதிப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு. காசியை தரிசிக்க வேண்டும் என்று கனவுகாணும் மக்களுக்கு ஒரு மாத காலம் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் பேருதவியாக இருக்கும். காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் மீது எனக்கு பேருவகை ஏற்பட்டுள்ளது. இது ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வின் கொண்டாட்டம் மற்றும் அழகான தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடுவதாக இருக்கும்.
“பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்” - இளையராஜா எம்.பி. பேச்சு