இனி கணவர், மகளுடன் வாழவிரும்புகிறேன்: நளினி உருக்கமான பேட்டி

Nalaini rajini gandhi case video

ராஜீவ் கொலையில் உண்மைக்குற்றவாளிகள் எனக்கு தெரிந்திருந்தால், 31 ஆண்டுகள் ஏன் சிறையில் இருக்கிறேன்”

தீ மிதித்தல், திருப்பதிக்கு நடந்துவருகிறேன் என வேண்டுதல்கள் நிறைய உள்ளன.

16 ஆண்டுகளாக மகளை பார்க்கவே இல்லை.. அவள் இருக்கும் லண்டனுக்கே செல்ல முருகன் விரும்புகிறார்; அவரை அனுப்பி வைக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் யார் என்பது எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். ராஜீவ் காந்தி இறந்தபோது எங்கள் வீட்டில் யாரும் சாப்பிடக்கூட இல்லை. சிறப்பு முகாமில் இருந்து நால்வரையும் விடுவிக்க வேண்டும். சாந்தன் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். நாங்கள் லண்டன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளோம்.

எங்கள் விடுதலைக்கு முதன்முதலாக ஒரு திறவுகோலை தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.

எங்கள் விடுதலைக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை பெற உதவியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி ஐயா அவர்கள்.

ராஜிவ் காந்தி வழக்கில் விடுதலையான ரவிச்சந்திரன் & நளினி பேட்டி!

பிரியங்கா காந்தி அவர்கள் விருப்பப்பட்டால் நான் சந்திக்க தயார். பிரியங்கா காந்தி என்னை சிறையில் சந்தித்து பேசிய போது அவர் கண் கலங்கினார். இந்த வழக்கை நடத்த உதவி புரிந்த தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி! எங்களுக்காக உயிர் துறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளோம். எனது கணவரை என்னுடனே அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வெளிவந்த நளினி பேட்டி

Video:

Related Posts

View all