எளிய குடும்பத்தில் மகளாக பிறந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600.. மாஸ் காட்டிய நந்தினி.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதன்முறையாக 600/600 மதிப்பெண் பெற்று சரித்திர சாதனை படைத்துள்ள மாணவி ச.நந்தினி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திற்கும், தனது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் மாணவி ச.நந்தினி மென்மேலும் உயர்ந்து, சாதனைகள் பல புரிந்து வாழ்வில் மேன்மையடைய வாழ்த்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கனிவான வேண்டுகோள். 12 ம் வகுப்பு மாணவி நந்தினி தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் எடுத்து அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தங்களுடைய சிறப்பு மிக்க ஆட்சியில் மாணவி நந்தினிக்கு இதுவரை எந்த அரசியலிலும் கொடுத்திடாத ஊக்கத்தொகையையும், மாணவி அவர்களுக்கு மடிக்கணினி, இருசக்கர வாகனம், கைபேசி என வழங்கி அவரை மகிழ்வித்து இனிவரும் காலங்களில் அனைத்து மாணவ மாணவியர்களும் தமிழ்நாட்டிற்கு கல்வியில் பெருமை சேர்த்திட உறுதுணையாக அரசு எப்பொழுதும் இருக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பலர் கருத்து.
“தமிழ் படிச்சி என்ன ஆகப்போகுது. தேர்ச்சி பெற்றால் போதும்” என்கிற மனநிலையில் பெரும்பான்மை மாணவர்கள் இருக்கையில், தாய்மொழிப் பற்று கொண்டு தமிழில் கவனம் செலுத்தி 100/100 மதிப்பெண் பெற்றிருக்கும் தங்கைகள் நந்தினி மற்றும் இலக்சனா இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.