தமிழ் கடல் நெல்லை கண்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது. அரசியல் தலைவர்கள் அஞ்சலி. வீடியோ வைரல்.
அரை நூற்றாண்டுக் காலம் இலக்கியத் துறையில், சிறந்து விளங்கிய பேச்சாளர்,எளிய நகைச்சுவை கலந்த ஆழ்ந்த சமூக கருத்துகளுக்குச் சொந்தக்காரர்,நேர்த்தியான எழுத்தாளர்,“தமிழ்க்கடல்” திரு.நெல்லை கண்ணன் (77வயது) அவர்கள் மறைந்தார்.
நெல்லை கண்ணன் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்;
அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்"
-தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சிந்தித்தால் தமிழ், வாய் திறந்தால் பழம்பாடல், சொல்வதெல்லாம் மேற்கோள்கள் என, தமிழே உயிராக வாழ்ந்த தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் மறைந்துவிட்டார். அவரது மூவாத மேடைத் தமிழ் மூத்த செவிகளில் ஒலித்தபடியே இருக்கும். தமிழய்யாவுக்கு என் அஞ்சலி.
-மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்
பல அரசியல் தலைவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் பேசியது,
அவரைப் போல் தமிழை நேசிக்கவும், பேசவும் இங்கு எவரும் இல்லை; நெல்லை கண்ணனுக்கு நிகர் நெல்லை கண்ணன் தான்.
-நெல்லை கண்ணன் உடலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அஞ்சலி!
Video:
”அவரைப் போல் தமிழை நேசிக்கவும், பேசவும் இங்கு எவரும் இல்லை; நெல்லை கண்ணனுக்கு நிகர் நெல்லை கண்ணன் தான்”
— Sun News (@sunnewstamil) August 19, 2022
- நெல்லை கண்ணன் உடலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அஞ்சலி!#SunNews | #NellaiKannan | #RIPNellaiKannan | #Thirumavalavan pic.twitter.com/vlTfoL5g7G