Password-ஐ பிறருடன் பகிர்ந்து கொள்பவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க Netflix நிறுவனம் முடிவு!
Netflix | நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர முடியாது, வெவ்வேறு இடங்களில் ஒரே கணக்கை லாகின் செய்ய முடியாது என்று நெட்ஃபிலிக்ஸ் சில வாரங்களுக்கு முன்பே புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவிப்பை மேற்கொண்டது. கொரானாவிற்கு பிறகு ஓடிடி தளங்களின் தேவை அதிகரித்திருக்கிறது. பெரும்பாலும் திரைப்படங்கள் ஓடிடியில் வெளிவர ஆரம்பித்தது. கொரோனா காலத்தில் மக்கள் வீட்லிலேயே அடைந்து கிடந்த வேலையில் பரவலாக ஓடிடி தளங்களில் பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆரம்ப காலங்களில் வாடிக்கையாளர்களைக் கவர பல சலுகைகளை வழங்கிய ஓடிடி தளங்கள் நாளாக நாளாக பல மாற்றாங்களை கொண்டு வந்தது.. கட்டனங்களிலும் ஏற்ற இறக்கங்கள் செய்தது. விடுமுறை காலங்களில் ஓடிடி தளங்களை பயன்படுத்தப் பழகிய மக்கள் அதில் மூழ்கிப்போயினர். அதன் அடுத்தகட்டமாக நெட்பிளிக்ஸ் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளது.
ஓடிடி ப்ளாட்ஃபார்மில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான நெட்பிளிக்ஸ், இனி தனது வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்ட் பாஸ்வேர்ட்டை பிறரிடம் பகிர்வதற்கு முட்டுக்கட்டை போட திட்டமிட்டுள்ளது. நெட்பிளிக்ஸில் தனி நபர் ஒருவர் அக்கவுண்ட் வைத்திருந்தால், ஒரு அக்கவுண்டிற்கு மட்டும் பணம் செலுத்தி விட்டு, பலரும் அந்த அக்கவுண்டை தனிப்பட்டமுறையில் பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் தங்களுக்கு வருமானம் குறைவதாகவும், ஒரு அக்கவுண்ட்டை ஒரே வீட்டை சேர்ந்த பலரும் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக ப்ரீமியம் மற்றும் ஸ்டாண்டர்ட் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. கூடிய விரைவில் பாஸ்வேர்டுகளை பகிர்ந்து கொள்பவரிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.