ஆளுநரும் சரியல்ல.. ஆளுநர் செயலும் சரியல்ல.. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் பேட்டி
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 4 மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. ஆளுநரின் செயலை ஒன்றிய அரசு கண்டும் காணாததுபோல இருப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம்!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாது என்று கூற ஆளுநருக்கு உரிமை இல்லை; மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய ஒன்றிய அரசு அலட்சியமாகச் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது!
-திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் பேட்டி!
சூதாட்டம், பந்தயம், பொது சுகாதாரம், பொதுமக்கள் நலன் & சமூக அமைதி இவையெல்லாம் பாதுகாத்திட சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில பட்டியலில் உள்ளது அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி அனுப்பபட்டதை ஆளுநர் #RummyRavi தடுக்கிறார், அது ஏன் என்று தெரியவில்லை.
இந்த ஆன்லைன் சூதாட்டம் மூலமாக மக்களுக்கு தெரியாமல் எத்தனையோ மக்கள் தனது உயிர் மற்றும் வாழ்க்கையை தொலைத்து இருக்கிறார்கள். இத்தகைய தீங்கு விளைவிக்கும் விளையாட்டின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் , சட்ட மசோதாவை திரும்பி அனுப்பியது என்?
Video:
#WATCH | “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 4 மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல..”
— Sun News (@sunnewstamil) March 13, 2023
- திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் பேட்டி!#SunNews | #TRBaalu pic.twitter.com/AEZq8Lr2Bq