ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல். நாளை முதல் அமல். முழு விவரம்.
ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கும் மகான்கள் அரசாங்கம் இந்த செயலிகளை தடைசெய்தால் நாங்கள் ஏன் நடிக்க போகிறோம் என்கிறார்கள் ஆகையால் இது போன்ற சம்பவங்கள் இதுவே கடைசியாக இருக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில்,
இன்று ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நிறைவேற்றபட்ட சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்ததால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைம் வாழ்வின் விளிம்பிற்கே செல்லும் அனைத்து தரப்பு மக்களையும் காப்பாற்றியுள்ளீர்கள் என்று மக்கள் பாராட்டு.
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.!
-மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
அப்படியே அந்த NEET விலக்கு மசோதாவுக்கும் ஒப்புதல் முதல்வர் ஸ்டாலின் வாங்கிட்டாருன்னா, அடுத்த பாத்து வருஷத்திற்கு திமுக ஆட்சி தான்.