சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை
பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஓபிஎஸ் ஆலோசனை.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும்"- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.
செய்தியாளர்களை கேள்வி கேளுங்க கேளுங்க என்று கேட்டு, கேட்ட கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில்.
பிரதமரை வழியனுப்பிய பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறியது:
பிரதமர் மோடி என் உடல்நிலை எப்படி உள்ளது என கேட்டார். நன்றாக உள்ளது என தெரிவித்தேன்.
உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என்று கூறினார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும்” என்றார்.
Video:
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.#நரேந்திர மோடி ஜி அவர்களை விமான நிலையத்தில் சந்தித்த பின் -அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் ஐயா திரு.#ஓ_பன்னீர்செல்வம் BA.,MLA அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். #PMOIndia #AIADMK_ChiefOPS pic.twitter.com/VPKAcXg7fq
— Theni . P. Navaneethan MBA (@TheniPNaveen08) July 29, 2022