ஓபிஎஸ் பேனரை கிழித்த தொண்டர்கள்.. ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் ஓபிஎஸ்தான்.. ஜெயக்குமார் குற்றசாட்டு.. வைரல் வீடியோ..
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலவதியாகிவிட்டது.
அதிமுகவை வழிநடத்த சட்ட விதிகளின் படி தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை கூட்டினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும்.
சென்னை அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 74 தலைமைக்கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
ஓபிஎஸ் தொடர்ந்து அதிமுக பொருளாளராக தொடர்வாரா என்று ஜூலை 11 ம்ந்தேதி பொதுக்குழு முடிவு செய்யும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
நேற்று சொந்த ஊர் தேனிக்கு சென்ற ஓபிஎஸ் தேனியில் இருந்து சென்னை புறப்பட்டார். அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில் சென்னை வருகிறார் ஓபிஎஸ்.
கிழிக்கப்பட்ட OPS புகைப்படம் அடங்கிய பேனர் Video:
கிழிக்கப்பட்ட @OfficeOfOPS புகைப்படம் அடங்கிய பேனர்.
— Nisanth (@idhaliyan) June 27, 2022
இடம் :- அதிமுக தலைமை அலுவலகம்.#ADMK #admkgeneralbodymeeting pic.twitter.com/E0G5ZFhaxi