அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
நாளை சென்னையில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி.
பொதுக்குழுவில் கட்சியின் சட்ட விதிகளை திருத்தவும் தடையில்லை; பொதுக்குழு விதிகளை திருத்துமாறு கோரும் வழக்குகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.
கட்சி விதிகளை திருத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதால் நாளை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படும் என தகவல்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்பார்கள். இப்போது தர்மம் வென்றிருக்கிறது. ஆகவே, தர்மம் என்றும் நிலைத்திருக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி