அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களையும், கட்சி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது -
அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.
Recent News:
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் திருமதி பழனியம்மாள் நாச்சியார் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைகிறோம். ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). அவருக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று தாயாரை பார்த்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தாயின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் விரைந்துள்ளார்.