அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் - ஓபிஎஸ் அறிக்கை.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக ஓபிஎஸ் அறிக்கை.
நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம்.
ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதிக் கழக செயலாளர் பதவிகள் மீண்டும் உருவாக்கம் என ஓபிஎஸ் அறிவிப்பு.
ஜெயலலிதா தன்னை முதல்வராக்கினார் என சொல்லிக்கொள்ளும் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் அறையை எட்டி உதைத்து, உள்ளே இருந்த பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளார், அங்கு சென்று அமர்ந்துள்ளார்; அவருக்கு எப்படி தைரியம் வந்தது?
-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி.
ஓ.பன்னீர்செல்வம் மகன் எம்.பி. ரவீந்திரநாத்தை செயல்படவிடாமல் தடுக்கும் இபிஎஸ்க்கு சசிகலா கண்டனம்.
ரவீந்திரநாத்தை அதிமுகவில் இருந்து நீக்கியது எடப்பாடி தரப்பு என்பது குறிப்பிடத்தக்கது.