பிரதமர் நரேந்திர மோடி சொன்னதால்தான் துணை முதல்வர் பதவி ஏற்றேன்: ஓபிஎஸ் பரபரப்புப் பேட்டி..!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசியது HIGHLIGHTS:
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறவேண்டும்.
என் கருத்து ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம்.
அதிமுகவில் தற்பொழுது நடப்பது தனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுக்கிறது.
பாஜக தங்களை எதிர்க்கட்சி என சொல்லிக்கொள்வது குறித்து கேட்ட பொழுது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எண்ணிக்கை அடிப்படையில் யார் எதிர்க்கட்சி என்பது தெளிவாக உள்ளது. சீமான், அன்புமணி ராமதாஸ் கூட தான் எதிர்கட்சிகள் என சொல்லிக் கொள்கிறார்கள்.
அதிமுகவில் என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதிமுகவில் இருந்து என்னை யாரும் ஓரங்கட்ட முடியாது.
பிரதமர் நரேந்திர மோடி சொன்னதால்தான் துணை முதல்வர் பதவி ஏற்றேன்.
சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டுமென நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓபிஎஸ் பேசியுள்ளார்.