தமிழ் விக்கி தூரன் விருதை முதல் நபராகப் பெறும் இன வரைவியல் ஆய்வாளர் கரசூர் பத்மபாரதிகையை புகழ்ந்து தள்ளிய கமல்.
2022-ஆம் ஆண்டிற்கான தமிழ் விக்கி தூரன் விருது பெறும் மானுடவியல் - நாட்டாரியல் ஆய்வாளரான கரசூர் பத்மபாரதியை மனதார வாழ்த்துகிறேன். விரிவான கள ஆய்வுகளுடன் அவர் எழுதிய நரிக்குறவர் இனவரைவியல், திருநங்கையர் சமூக வரைவியல் ஆகியவை மிக முக்கியமான ஆக்கங்கள்.
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரை உரிய வகையில் கெளரவிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைப் பாராட்டுகிறேன்.
இவ்வாறு கமல் ட்வீட் செய்துள்ளார்.
தொண்டர்களின் கருத்து:
இம்மாதிரி நல்ல பாராட்டுகளை சொல்லி, நாட்டின் பெருமையை தினமும் ஏதோ ஒரு வகையில் நேர்மையாக சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் மாண்புமிகு நம்மவர் அவர்களுக்கு நன்றி சொல்லி மாளாது. தலைவன் என்று கூறும் தகுதி மாண்புமிகு நம்மவருக்கு என்றும் உண்டு. அது நிரந்தரம்.
இப்படி பட்டவர்களை பாராட்டுவது சிறப்பு நன்றி ஆண்டவரே
இதெல்லாம் பார்க்க படிக்க எப்படி சார் டைம் கிடைக்குது ரோபோவுக்கு கூட ஒரு டைம் இருக்கு அது சார்ச் ஏற்றும் வரை நீங்க எப்படி சார் ஓய்வில்லாமல்..
கரசூர் பத்மபாரதி - இவர் போன்ற மானுடவியல் ஆய்வாளர்கள் எல்லாம் அவ்வளவாக வெளி உலகிற்கு அறிமுகம் இல்லாதவர்கள். நம்மவர் வாயால் வாழ்த்து பெற்றவுடன் அவர்கள் புகழின் உச்சிக்கு செல்வது தவிர்க்க முடியாத நிகழ்வு வாழ்த்துக்கள்.