'மானமும்,அறிவும் மாந்தருக்கு அழகு' பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள். முழு விவரம்.
சமூகத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி, அவலங்களுக்கு எதிரான போர்க்குரலாக ஒலித்து, இறுதி காலம் வரை எளியோரின் இன்னல் தீர்க்க பணியாற்றிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்.
சமத்துவ, பகுத்தறிவு தந்தையை கடவுள் மறுப்பு எனும் சிறு வட்டத்திற்குள் அடைக்க முயற்சிக்காதீர்கள். எந்த வட்டத்திற்குள்ளும் சிக்காத பெரியார் புகழ் ஓங்குக. இன்று தந்தைபெரியாரின் 144-வது பிறந்தநாள்.
சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை, செயலூக்கம் ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர். இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன். -கமல் ட்வீட்,
பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.