தந்தை பெரியார் நினைவு தினம் இன்று.. பகுத்தறிவுப் பகலவன் பற்றிய கீச்சுகள்.
தந்தை பெரியருக்காக அரசியல்வாதிகள் எழுதிய சில கீச்சுகள்:
தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கத்தைப் பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க வைத்த தந்தை பெரியார், திராவிட மாடலின் முதல் அடியைச் சுயமரியாதை இயக்கமாக்கி, தாய்க் கழகமாம் திராவிடர் கழகமாய் பரிணமித்து, திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் சூரியனாய் உதயமானது.
தன்மான சூரியன், தந்தை பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழகத்தினருடன், மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.
பெண்களுக்கு எதிரான அநீதி நிலவிய நிலத்தை,சமூகநீதியால் உழுது,சமன்படுத்திய சமத்துவக் கலப்பை தந்தை பெரியார் !
கிழவா உனக்கோ உன் சிந்தனைக்கோ இல்லை மரணம்🔥
என்றும் எங்கள் வழிகாட்டி நீ, சமூகநீதியின் உயிர்நாடி நீ!
திராவிடப் பேரியக்கத்தின் பிதாமகர், சாதி, மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைவதற்கும், பெண்ணுரிமையைப் போற்றிப் பாதுகாப்பதற்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. -TTV.தினகரன்
ஆதிக்க சக்திகளை விரட்டி, சமூகநீதி சாசனத்திற்கு கேடயமாகத் திகழ்ந்த பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் இன்று!