பிங்க் நிற பேருந்துகள் அறிமுகம்..தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.
மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் முதற்கட்டமாக 60 பிங்க் நிற பேருந்துகள் அறிமுகம். இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை பெருநகரில், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகளை, பெண்கள், சுலபமாக அடையாளம் காண பிங்க் நிற பேருந்து
60 பேருந்துகளின் சேவையை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தொடங்கி வைத்தனர்.
உதயநிதி ஸ்டாலின் ட்வீட்: பெண்களின் சமூக முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் #StalinBus என தாய்மார்கள் அன்போடு அழைக்கும், மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம்காணும் வகையில் முதற்கட்டமாக பிங்க் நிறம் பூசப்பட்ட 50 பேருந்துகளின் பயன்பாட்டை இன்று தொடங்கிவைத்தோம்.