ரேஷன் கடைக்கு ஆய்வு செய்யாமலேயே, பொருளைப் பார்க்காமலேயே தரமில்லை என எப்படி கூற முடியும்? பியுஷ் கோயலுக்கு சக்கரபாணி பதிலடி

Piyush goyal vs sakarabani statement

இன்று காலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், நாங்கள் தரமான அரிசியை தருகிறோம், மாநிலத்தில் தரமில்லாத அரிசி தருவதாக குற்றச்சாட்டை கூறியுள்ளார்

அவர்கள் கொடுப்பதே, எப்படி தரமில்லாததாகப் போகும்.

4 அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது. பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

செப்.27ம் தேதி சென்னை தியாகராய நகரில் ஆய்வு செய்த ஒன்றிய இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே, உணவுப்பொருட்கள் தரமாக வழங்கப்படுவதாக கூறினார்

கடைக்குச் சென்று பொருளைப் பார்க்காமலேயே, பியூஷ் கோயல் குறை கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை இதே மத்திய அமைச்சர் பாராட்டியிருந்தார்.

-தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில்.

“ஏழைக்களுக்கான அரசினையே பிரதமர் மோடி விரும்புகிறார்; திமுக அரசு, மத்திய அரசின் மூலம் கிடைக்கும் திட்டங்களை மக்களிடம் போய் சேரவிடாமல் செய்கிறது. இங்கு இருக்கும் அமைச்சர்கள் பிரதமரை தறக்குறைவாக பேசி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது”

மடிபாக்கம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பியூஷ் வேத்பிரகாஷ் கோயல்,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு.

--

மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயலா கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் சென்னையில் இன்று சந்தித்து China உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் Plastic Cigarette lighterகளை தடை செய்ய வலியுறுத்தி அதற்கான மனுவினை வழங்கியனார் அதிமுக MLA கடம்பூர் ராஜு.

Related Posts

View all