எனது ட்விட்டர் கணக்கை முடக்கி, தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதில் எனக்கு தொடர்பு இல்லை. Full Report.
எனது ட்விட்டர் கணக்கை முடக்கி, தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதில் எனக்கு தொடர்பு இல்லை.
புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய வழக்கில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு.
தூத்துக்குடியில் பதிவான வழக்கில் அவர் முன் ஜாமின் பெற்ற நிலையில், திருப்பூரில் பதிவான வழக்கிற்கு முன் ஜாமின் கோரியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்லப்படுவதாக போலி வீடியோக்கள் பதிவிட்டு வதந்தி பரப்பியதாக, உத்தரப் பிரதேச பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மார்ச்: 22 தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட வீடியோ மற்றும் உண்மையற்ற தகவல்களை ட்விட்டரில் பதிவிட்ட உ பி பாஜக தலைவர் பிரசாந்த் உம்ராவ். மதுரை ஹை கோர்ட் முன்ஜாமின் வழங்கியது.
மார்ச்: 8 தமிழ்நாட்டில் நடக்காத ஒன்றை நடந்ததாக சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு-பகிர்வு செய்தவரான பிரசாந்த் உம்ராவ் எனும் பாஜக பொறுப் பாளர் தற்பொழுது இவ்வழக்கில் பிணைகோரிய மனு வில், பொய்ச் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன் என தனது முன்பிணை கோரிய மனுவில் பிரசாந்த் உம்ராவ்.