திருக்குறள் பல நூற்றாண்டுகளாக நமது அனைவரது வாழ்வுக்கும் வழிகாட்டியாக உள்ளது: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை!!
வளமான கலாச்சாரம், நாகரீகத்தை கொண்டது தமிழ்நாடு: பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை
!நீலகிரி மாவட்டம் மசினகுடி வந்திருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு காரில் இருந்து இறங்கி வழியில் காத்திருந்த மக்களை சந்தித்து மிட்டாய்களை வழங்கினார்… மேலும் சிறுமி ஒருவர் கொடுத்த புத்தகத்தையும் பெற்றுக் கொண்டார்.
தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்து ஆஸ்கர் புகழ் பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்களுக்கு பட்டம், பதங்கக்கங்களை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
சென்னைப் பல்கலைக்கழகம் கல்வியை மேம்படுத்துவதில், இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது. 1867ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம், இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
தமிழின் சங்க இலக்கியங்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பொக்கிஷம். திருக்குறள் அறிவுக்களஞ்சியமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களும், சிற்பங்களும் தமிழகத்தின் கலை சிறப்பினை விவரிக்கின்றன. கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.