என் Game என்னை விட்டு போகாது,Come back குடுப்பேன் - எவ்வளவு கனவு கண்டிருக்கும் அந்த குழந்தை.
அலட்சிய மருத்துவர்களின் சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை ப்ரியா மரணமடைந்த சம்பவம்.
அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு, மருத்துவ அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதைப் போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்தது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்
இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் - டிடிவி தினகரன்.
கால்பந்து வீராங்கனை உயிரிழிப்பு..! விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்துக்கள்..! அவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும்..! மரு.அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
“என் Game என்னை விட்டு போகாது,Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya -இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்
Latest Update:
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது மிக மிக துயரமான சம்பவம்
- விசாரணையில் மருத்துவர்கள் கவனக்குறைவுடன் செயல்பட்டது தெரியவந்தது
- தவறு செய்த மருத்துவர்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்