இவர் இறந்தாலும் இவர் நினைவு இன்னும் நெஞ்சில்.. புனீத் ராஜ்குமார் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி.
நினைவு நாள் அன்புக்குரிய அப்பு, டாக்டர் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள். மிகச் சிறிய வயதில் அவர் ஆற்றிய சாதனைகள், புகழ், மக்கள் சேவையை விவரிக்க வார்த்தைகள் போதாது. கந்ததகுடி வெளியீட்டிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவரது அன்பு, ஆனந்தம் மற்றும் சுற்றியுள்ள உயிர்களின் மீதான ஆழ்ந்த ஈடுபாட்டால் புனீத் என்றும் நம் நினைவில் நிற்பார். அவருக்கு அன்பானவர்களின் இடையறாத முயற்சியால் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியம் தொடர்வதைக் காண்பது அற்புதம் தொடர்வதைக் காண்பது அற்புதம் என்று சத்குரு கூறியுள்ளார்.
என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே நடக்கும். தினமும் உடற்பயிற்சி செய்து ஊட்டச்சத்து உண்ட கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் 45 வயதுக்குள் அகால மரணமும் எங்கள் ஊர் பாட்டி ஒன்று அரைகுறை உணவுடன் 105 வரை வாழ்ந்ததும் எதுவும் நம் கையில் இல்லை என்பதை உணர்த்திவிட்டன.
நடிகர்கள் சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத், சேதுராமன், புனித் ராஜ்குமார், போன்ற இளம் கதாநாயகர்கள் மறைவு உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் மறைவும் பெரிய அதிர்ச்சி தான். இவர்கள் இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.