பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியா பேரழிவை நோக்கி நகர்கிறது! – ராகுல் காந்தி
வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் தான் எனது தந்தையை இழந்தேன். அதே காரணங்களுக்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன்.
அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும்.
நாம் ஒன்றாக வெல்வோம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ராகுல் காந்தி.
--
கன்னியாகுமரி - காஷ்மீர் வரை “பாரத் ஜூடோ” யாத்திரையை இன்று தொடங்கினார் ராகுல் காந்தி. யாத்திரையை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
யாத்திரையில் தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில முதல்வர்கள் பங்கேற்பு.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து எங்களை மிரட்டலாம் என நினைக்கிறார்கள்; ஒரு நாளும் பயப்பட மாட்டோம்.
இங்கு பறக்கும் தேசியக்கொடி, ஒரு மாநிலத்திற்கோ, ஒரு மதத்திற்கோ, தனிப்பட்ட ஒருவருக்கோ சொந்தமானது அல்ல
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாளம் இந்தக்கொடி
-கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பேச்சு