`வருத்தத்துடன் பெரியார் மண்ணிலிருந்து பிரிந்து செல்கிறேன்' 5வது நாள் பயணத்தை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கினார் எம்.பி.ராகுல் காந்தி
`வருத்தத்துடன் பெரியார் மண்ணிலிருந்து பிரிந்து செல்கிறேன்’ என்று ராகுல் காந்தி சொன்னதில் மக்கள் மனதை இங்கு வென்றார்.
இந்திய ஒற்றுமை பயணம் 5வது நாளில் தற்போது கேரளாவில் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்போடு நடைபெற்று வருகிறது. யாத்திரையை திருவனந்தபுரத்தில் தொடங்கினார்.
5வது நாள் கேரள மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்க்கொள்ளும் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியது அனைவரின் கவிதையும் ஈர்த்தது.
Highlight அவர் பேசியதில்:
தேசியக்கொடி நமக்கு எளிதாக கிடைத்ததில்லை. பரிசாக கிடைத்ததில்லை. இந்திய மக்கள் தங்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தியதால் கிடைத்தது.
தலைவர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்து வரும் தேவகுமாரன்கள் அல்ல. சாதாரண மனிதர்களின் உணர்வுகளோடு நெருங்கி நிற்பவர்கள்தான் உண்மையான தலைவர்கள்.
ராகுல் காந்தி சாதாரண மக்களின் உள்ளத்தில் குடிகொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது.