ஒரே ஒரு ட்வீட்.. ரஜினியை போட்டு எல்லாரும் பொளக்குறாங்க.. அப்டி என்ன போட்டாரு? முழு விவரம்.
டெல்லியில் திருவாவடுதுறை ஆதினத்திடம் செங்கோலை பெற்றுக் கொண்டார் பிரதமர் மோடி.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நாளை வைக்கப்படவுள்ள செங்கோல் பிரதமரிடம் வழங்கப்பட்டது.
பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 21 ஆதினங்களும் பங்கேற்பு.
Rajini Tweet:
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.
#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
சவுக்கு ஷங்கர்: இப்படி ட்வீட் போட்டா வருமான வரித்துறை கேஸை முடிச்சி தர்றேன்னு சொன்னாங்களா? @rajinikanth
ரஜினி குரு: வாழ்த்தணும் என்று முடிவு பண்ணிட்டால் அது யாரு எந்த கட்சி , எந்த ஆட்சி என்பதை எல்லாம் தலைவன் கருத்தில் கொள்ளவதில்லை , துணிந்து வாழ்த்தி விட்டு போய்ட்டே இருப்பாரு . அது தான் சூப்பர் ஸ்டார் 🔥
ஷாலினி: வரலாறும் தெரியாது ஒரு எழவும் தெரியாது 🤦🏾டிவிட் போட மட்டும் வந்துடும் சூப்பர் சங்கி.
தீபக்: தமிழ் இந்தியாவில் ஆட்சி மொழியாகக் கிடையாது. பிறகு எப்படி இது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும்?