முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6பேரும் விடுதலை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிருந்த 6 பேரும் விடுதலை!” - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நளினி, முருகன், ரவிச்சந்திரன் உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்!
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் சற்றுமுன் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிரபராதிகள் அனைவரும் விடுதலை ஆகிறார்கள் என்பதிலிருந்து நீண்ட நெடிய தாமதம் என்றாலும் “நீதி வென்றே தீரும்” என்கிற நம்பிக்கை எளிய மக்களுக்கு பிறக்கட்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைப்படுத்தப்பட்டிருந்த 6 பேரை உச்சநீதிமன்ற நீதிபதி திரு கவாய் தலைமையிலான அமர்வு விடுதலை செய்திருப்பதை வரவேற்கிறோம். அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.இதை தமிழ்நாடு ஆளுநர் புரிந்துகொள்வார் என நம்புகிறோம் என்று சில அரசியல்வாதிகள் கருத்து.