ஆளுநர் ரவியை இன்னைக்கு கன்டென்ட் ஆகிட்டாங்க.. ஸ்டாலின் பேச்சு.. பதறி அடிச்சுட்டு வெளிய ஓடிருக்காரு. வீடியோ வைரல்.

Ravi went out latest video viral

ஆளுநர் திரு. ரவி சட்டமன்றத்தில் தனது இருக்கையில் அமர்ந்திருந்த போதே அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அவர் முன்பாகவே படிக்கத் தொடங்கிய தமிழ்நாடு முதல்வர் திரு. ஸ்டாலின்

உடனடியாக சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் தமிழ்நாடு ஆளுநர்.

அரசு தயாரித்த ஆளுநர் உரையில் தானாக சில விஷயங்களை தவிர்த்தும் சேர்த்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய நிலையில் உரையில் இல்லாத வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது.

“உலக அளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கு காரணமே இந்திய அரசியலமைப்பு சட்டம் தான். அந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெயரையே ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காதது வேதனை அளிக்கிறது”

  • தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சு.

இன்றைய வெளிநடப்பு மூலம் ஆளுநர் ரவி தேசியகீதத்தை; மக்கள் பிரதிநிதிகளை; சட்டப்பேரவை மாண்பை அவமதி்த்திருக்கிறார். ‘வேதாந்த நோக்கத்தோடு தமிழக அரசின் உரையை தனிநபராக திருத்தி மாநில அரசின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். ஆளுநர் ரவியை திரும்பப் பெறுவதே தீர்வாக அமையும்.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகளைப் போல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த முதல் ஆளுநர் ரவீந்திர நாராயண ரவி.

ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்"

-நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை

Video:

Related Posts

View all