அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்த மாயத்தேவர் காலமானார். அவருக்கு வயது 88..
மாயத்தேவர் காலமானார் - தலைவர்கள் இரங்கல்.
அதிமுகவில் முதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற மாயத்தேவர் உடல்நலக்குறைவால் காலமானார்.
மாயத்தேவர் உடலுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அஞ்சலி - ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் இரங்கல்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அஇஅதிமுக துவக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில்,1973-ஆம் ஆண்டில் முதன் முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற பெருந்தகையர் திரு.கே.மாயத்தேவர் அவர்களின் மறைவை அறிந்து ஆற்றொணாத் துயரமும்,மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
கழகத்தின் மூத்த முன்னோடி திரு.மாயத் தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என்று எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கழகம் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த கழக முதல் எம்.பி திரு.மாயத்தேவர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது! என்று ஓபிஎஸ் ட்வீட்.