இங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் விரைவில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். இங்கிலாந்தில் புதிய ஆட்சியை அமைக்குமாறு அழைப்பு விடுத்தார் மன்னர் 3ம் சார்லஸ். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கவுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்!
எனது நடவடிக்கைகளின் மூலம் கட்சியிலும், நாட்டிலும் ஒற்றுமையை உருவாக்குவேன். நாட்டின் பொருளாதார உறுதி நிலையை ஏற்படுத்துவதே தமது அரசின் முதல் திட்டமாகும் என்று பிரதமர் ரிஷி சுனக் உறுதி.
மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பாரத தேசத்து புதல்வியை மனைவியாக கொண்ட ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதம மந்திரி ஆக பதவி ஏற்றிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளும்போது வளர்ந்த நாடான இங்கிலாந்தில் கூட நம்முடைய மதம் மற்றும் கலாச்சாரத்திற்கு உள்ள மரியாதையை புரிந்து கொள்ளுங்கள். என்று ஒரு கூட்டம் கூறிக்கொண்டிருக்கிறது.
இங்கிலாந்தின் நன்மைக்காக ரிஷி சுனக் வெற்றியடைய வாழ்த்துக்கள் - முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார்.
--
ரிஷி சுனக் அவரது தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்த பதவியை அடைந்துள்ளார். அப்படி தகுதியின் அடிப்படையில் இங்கையும் வருவதற்கு யாரும் தடை இல்லை. முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!