நான் தான் அதிமுக பொதுச்செயலாளர்.. மீண்டும் புயலை கிளப்பிய சசிகலா பேச்சு சர்ச்சை.. முழு விவரம்..
நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சசிகலாவின் பதில்:
கேள்வி : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் எப்போது இணையப்போகின்றீர்கள்..?
சசிகலா : நான் அதிமுகவின் பொதுச்செயலாளர். இன்னொரு கட்சியில் எதற்காக இணைய வேண்டும்.
அதிமுக தலைமை அலுவலகம் விரைவில் செல்வேன் ; தொண்டர்கள் சூழ செல்வேன்…!
மேலும் சசிகலா பேசியது:
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 3வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. தற்போது அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக உள்ளனர்.
பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது. தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது.
வரும் 11ஆம் கேதி அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், சசிகலா திடீர் அறிவிப்பு.