அதிமுக ஒற்றைத்தலைமை புது ட்விஸ்ட்.. புரட்சிப் பயணத்தை தொடங்கினார் சசிகலா.. Viral Photos..
தொண்டர்களைச் சந்திக்கும் பயணத்தை தனது வீட்டிலிருந்து தொடங்கியுள்ளார் சசிகலா; அதிமுக கொடி கட்டிய பிரச்சார வாகனத்தில் சசிகலா!
வட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவருக்கு, அதிமுக தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆங்காங்கே பூக்கள் தூவுவதும், பட்டாசு வெடித்தும் வரவேற்று வருகிறார்கள்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சமடைந்துள்ள நிலையில் அரசியல் சுற்றுப்பயணத்தை திருத்தணியில் தொடங்குகிறார் சசிகலா.
திருத்தணி வந்த சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி மேலதாளங்களுடன் வரவேற்றனர்.