இவன நம்பமுடியாது.. வெற்றிமாறனை தங்கமாக கலாய்த்த சீமான். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தன்னுடைய ஒவ்வொரு படைப்பின் மூலமாகவும் தான் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பதை வெற்றிமாறன் அவர்கள் நிரூபித்து வருகிறார்.. விடுதலை படம் அவரது முத்திரைகளில் ஒன்று.. வெற்றிமாறன் அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் என்று பல ரைஸ்கர்கள், பெரியவர்கள், அரசியல் பிரமுகர்கள் பாராட்டி வர்ராங்க.
விடுதலை 👌👌 போலிஸ் brutality கொடூரம். போலிஸ் சைடு கொடூர சைகோஸ்னு தெளிவா பதியுது ஆனா அந்த சைடு நல்லவங்களா கெட்டவங்களா க்ரே ஷேடா என்ன சொல்ல வராப்லனு தெளிவா தெர்ல. எதோ பாதி படம் பாத்த ஃபீலிங்தா இருக்கு என்பது ஒரு தரப்பு மக்களின் கருது. அதுக்காக தான் இரண்டாவது பாகம் வருது. அதில் விளக்கமாக தெரிவிப்பாங்க.
மனித உணர்வுகளுக்கு விருந்து கொடுக்கிறது விடுதலை. கலை நிரம்பி நிரம்பி வழிகிறது. ஒளிப்பதிவை தனியாக நோட் பண்ணும் சிந்தனைக்கூட வராத அளவுக்கு மிக எதார்த்தமான ஒளிப்பதிவு. இதுபோல எல்லா டிபார்ட்மென்ட் ஒழுங்கா வேலை செய்தால் தான் இப்படி ஒரு தரமான படம் கிடைக்கும்.
வெற்றிமாறன் சமீபத்தில் பாரதிராஜா அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் தனியே படத்தை போட்டு காட்டியுள்ளார். அந்த படம் முடித்து சீமான் மற்றும் பாரதிராஜா பேசிய வீடியோ தான் இணையத்தில் வைரல். வெற்றிமாறனை புகழும்போது அவரிடம் இருக்கும் தன்னடக்கத்தை இந்த காணொளியில் பார்க்க முடிந்தது.
Video:
"இப்படிதான் வடசென்னை 2ம் பாகம்னு... வெற்றிமாறனை நம்ப முடியாது"
— Sun News (@sunnewstamil) April 1, 2023
'விடுதலை - பாகம் 1' திரைப்படத்தை பார்த்த பின்பு, சீமான் பேட்டி#SunNews | #Viduthalai | #VetriMaaran | @SeemanOfficial pic.twitter.com/7OsJedJvnF