"அண்ணாமலை என்ன பெரிய இசை மேதையா? மெட்டு சரி இல்லையாமே.. சீமான் நக்கல் வீடியோ வைரல்.
தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல் இருந்ததால் நிறுத்தினோம்!- அண்ணாமலை. உங்களுக்கு ‘வசை’ஞானம் மட்டுமல்ல, ‘இசை’ஞானமும் உண்டுனு தெரிஞ்சுக்கிட்டோம் பாஸ் என்று தமிழர்கள் கிண்டல்.
“அண்ணாமலை என்ன பெரிய இசை மேதையா?”
-கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கர்நாடகவில் பாதியில் நிறுத்தப்பட்டது தமிழர்கள் மன வலியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டு சரியில்லை என அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார் அண்ணாமலை என்ன இசை ஞானியா ? அப்படி என்றால் அண்ணாமலை தமிழ் தாய் வாழ்த்து பாடலை தன் வாயால் பாடி இருக்க வேண்டும் - சீமான்.
கர்நாடக மாநிலத்தில் “அண்ணாமலை பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு“ - எந்த சூழ்நிலையிலும் யாராக இருந்தாலும் “தமிழ்த்தாய் வாழ்த்து” தமிழை அவமதிப்பு செய்ததை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று OPS இன்று கருத்து.
அண்ணாமலை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் கிடையாது. ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டு, சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் எந்த காலத்திலும் தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை என்று இயக்குனர் அமீர் கருத்து.
கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது
ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம்
கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது
மறக்க வேண்டாம் என்று வைரமுத்து இரண்டு நாட்களுக்கு முன் ட்வீட் செய்திருந்தார்.
Latest Video:
"அண்ணாமலை என்ன பெரிய இசை மேதையா?"
— Sun News (@sunnewstamil) May 1, 2023
-கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்!#SunNews | #Annamalai | @SeemanOfficial pic.twitter.com/upZj1mp2dg