சீமான் -வெற்றிமாறன் கூட்டணி. படம் ரிலீஸ் ஆகும் அந்த நாள் தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகிற்கு தெரியவரும். முழு விவரம்.

Seeman vetrimaaran movie update

தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும்.

-நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு.

Seeman vetrimaaran movie update

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தில் செம்ம பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் வரும் நவம்பரன்று ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இரண்டாம் பாகத்தை மார்ச் 2023 மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். இது போக வெற்றிமாறன் - சூர்யா படம் வேறவுள்ளது. வாடிவாசல் படத்திற்காக சூர்யா ஒரு காளையுடன் பழகி வருகிறார் தினமும், அப்போது தான் ஷூட்டிங்கின் போது அடையாளம் கண்டு சூர்யாவை எதுவும் செய்யாது அந்த காளை.

இதையெல்லாம் முடித்துவிட்டு தளபதி விஜயுடன் ஒரு படம் பண்ணுவதாக கூறினார். ஆனால் சீமானின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதெல்லாம் இவர் முடிக்கவே கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிடுமே என்று புலம்பி வருகின்றனர்.

Related Posts

View all