செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு.. அதிகாரிகள் கார் உடைப்பு..அதிமுகவினர் ட்வீட்.
1.செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனம் மீது தாக்குதல்!
2.உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வள்ளியூரில் வைக்கப்பட்ட திமுக பேனர் கொடிகளை அற்ற கோரிய போலீசாருக்கு கடும் மிரட்டல்!
“எனது சகோதரர், அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை”
“எனது இல்லத்தில் எந்தவிதமான வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை”
“வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்”- மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
அதிமுகவினர் ட்வீட்:
ரெய்டுனு தெரிஞ்சதும் கூடி இருந்த அதிமுக தொண்டர்களுக்கு ரோஸ்மில்க், எலுமிச்சை ஜூஸ், உணவு பொட்டலம் என எஸ்.பி.வேலுமணி அசத்தினார், தொண்டரின் காது குத்து நிகழ்ச்சி பத்தி எல்லாம் கேட்டறிந்தார்
ஆனா இப்போ அதிகாரிகள் கார் கண்ணாடி உடைச்சு, அதிகாரிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடையும் அளவுக்கு அசத்தி இருக்காங்க
அதிமுகவை புறக்கணித்த மக்கள் சிந்தியுங்கள், மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்பதன் வெளிப்பாடு தான் அதிமுக நடந்து கொண்ட விதம். இது அம்மாவின் வளர்ப்பு…