நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாள்.. அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
உலக சினிமா கலைஞர்களின் தவப்புதல்வன், இந்திய கலைத்தாயின் தெய்வ மகன், எங்கள் தமிழக கலை குடும்பத்தின் கௌரவம், நடிகர் திலகம், “செவாலியர்” உயர்திரு : சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த மண்ணில் நாம் வாழ்வது பெருமை என்றும் எங்கள் நினைவுகளில்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தன்னுடைய அபரிமிதமான நடிப்பாற்றல் மூலம் நடிப்பில் தனக்கென்று ஒரு நடிப்பிலக்கணத்தை வகுத்து, தான் ஏற்றுக் கொண்ட கதைப் பாத்திரமாகவே வாழ்ந்து, நடிகர்களில் திலகமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அன்னாரது புகழையும் கலைத்திறனையும் போற்றி வணங்குகிறேன்! -ஓபிஸ் ட்வீட்.
அகிலம் போற்றும் நடிப்புப் சக்கரவர்த்தியாய், தேசியம் காத்த மாபெரும் ஆளுமை அவர்கள்.அரங்கிற்குள் இருந்த அவரது திருவுருவ சிலையினை மக்கள் பார்வைக்கு எடுத்து வைத்த முதலமைச்சர் அவர்களுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர்.