SMS-லுள்ள G, S, T, P-ன் அர்த்தம் தெரியாதா? தெரியாம இருந்தா மோசடிக்குள்ளாகலாம் – இதோ முழு விளக்கம்.

SMS அனுப்புநரின் பெயரில் உள்ள கடைசி எழுத்துகள் G, S, T, P – தெரியாம விட்டா மோசடிக்குள்ளாகலாம்!
நாம் பெறும் பல குறுஞ்செய்திகளில் (SMS) அனுப்புநரின் பெயரில் கடைசி எழுத்தாக G, S, T, அல்லது P இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்த எழுத்துகள் வெறும் அழகுக்கோ, டெமோக்கோ இல்லை. TRAI-யால் அங்கீகரிக்கப்பட்ட செய்திகளுக்கான அடையாளங்கள் இவை. இவை இல்லாத செய்தி அதிகம் சாத்தியமா ஒரு மோசடி SMS ஆக இருக்கலாம்.
🏛️ G - அரசு சார்ந்த தகவல் (Government)
G என்ற குறியீடு, அந்த SMS அரசாங்க அமைப்பிலிருந்து வந்ததைக் குறிக்கிறது. உதாரணமாக, ஆதார், வாக்காளர் தகவல், அரசு நலத் திட்டங்கள் போன்றவை இதில் அடங்கும்.

🔔 S - சேவை சார்ந்த தகவல் (Service)
S குறியீடு உள்ள SMS-கள், வாடிக்கையாளருக்கான சேவையை சார்ந்த தகவல்களாக இருக்கும். OTP, login தகவல், recharge updates போன்றவை இதில் அடங்கும்.

💳 T - பரிமாற்ற தகவல் (Transactional)
T என்பது, உங்கள் வங்கி, வாடிக்கையாளர் பரிமாற்ற தகவல்களுக்கான குறியீடு. உதாரணமாக, balance alert, withdrawal alert போன்றவை.

🛍️ P - விளம்பர செய்தி (Promotional)
P குறியீடு, பிரமோஷன்கள், சலுகைகள், விளம்பரங்கள் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் பொதுவாக அனுப்பப்படும் வணிகத் தகவல்கள்.

❌ எந்த எழுத்தும் இல்லையெனில் – அது மோசடியாக இருக்கலாம்!
இங்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று! SMS அனுப்புநரின் பெயரில் G, S, T, P ஆகியவை எதுவும் இல்லையென்றால், அந்த செய்தி பெரும்பாலும் மோசடி செய்தி (Scam message) ஆக இருக்க வாய்ப்பு அதிகம். TRAI-யால் அங்கீகரிக்கப்படாத, மோசடி செய்பவர்கள் இப்படிப் போட்டுப் பொய்யான OTP கோரிக்கை, banking link, அல்லது வதந்தி தகவல்களை அனுப்பி நம்மை ஏமாற்றுகிறார்கள்.
📵 அந்த வகை SMS-களில் உள்ள link-ஐ click செய்ய வேண்டாம், OTP பகிர வேண்டாம்!
📢 இந்த தகவலை மற்றவர்களுடன் பகிருங்கள் – பாதுகாப்பாக இருங்கள்!
இந்த awareness பகிர்ந்தாலே, உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மோசடி SMS-களில் சிக்காமல் இருக்க முடியும். பாதுகாப்பான டிஜிட்டல் உலகம் உங்கள் கையில் தான்!
