மூடப்பட்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு. முழு விவரம்.
மக்களின் எதிர்ப்பு, அரசின் அறிவிப்பு ஆகிய காரணங்களால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விருப்பமுள்ளோர் அதாவது தகுதி மற்றும் திறன் வாய்ந்த நிறுவனங்கள் ஆலையை வாங்குவது தொடர்பாக விருப்பத்தை ஜுலை 4ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகு நான்காண்டுகளாக ஆலை மூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.