இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் - அமித்ஷா. இந்தி மொழி திணிப்பு; வலுக்கும் கண்டனம்.
இந்தி மொழியை, நாடு முழுமைக்கும் பொதுமைப்படுத்த அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை - ட்ரெண்டிங்கில் #StopHindiImposition
இந்திய ஒன்றியத்தில் வெறும் 30% மக்கள் பேசும் இந்தி மொழியை கல்வி நிறுவனங்களில் கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என திரு.அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரை மீதம் உள்ள 70% இந்திய மக்களின் உணர்வை சிதைக்கும் செயல் என்று பலர் கருத்து.
“தமிழ் மொழியை நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். கவலைக்கிடமாக இருக்கும் ஆட்சியை கொஞ்சம் கவனியுங்கள்” என ஸ்டாலினை அண்ணாமலை சொல்கிறார்
இந்தி திணிப்பு வருகிறபோதெல்லாம் மற்றவர்களை விமர்சித்து திசை திருப்புகிறாரா அண்ணாமலை என்று நெட்டிசன்கள் கொந்தளிரிப்பு.
கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் . இந்தி மொழியை திணித்தால் கடந்த காலங்களை விட கடுமையான போராட்டம் நடக்கும்.
-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை.
அதிமுக எந்த நிலையிலும் இந்தி மொழியை ஆதரிக்காது.தமிழ் நாட்டிற்கு இந்தி தேவையில்லை: ஜெயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர்.