தமிழ்நாடு சொல் அல்ல தமிழரின் உயிர்! #தமிழ்நாடு_நாள்

Tamilnadu day update

ஒரு சட்டமன்ற தீர்மானத்தோடு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கனவையும் நிறைவேற்றும் விதமாக தமிழ் நிலப்பரப்புக்கு ‘தமிழ்நாடு’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரிட்ட நாள் இன்று.

முத்தமிழ் அறிஞர் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை, தமிழ்நாடாகவே போற்றி பாதுகாக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்தினத்தை தமிழ்நாடு நாள் என்று அறிவித்தார்கள்.

மாநிலத்தின் பெயர்ச்சொல் என்றில்லாமல் நம் அனைவரின் உயிர் சொல்லாக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு வாழ்க. அனைவருக்கும் #தமிழ்நாடு_நாள் வாழ்த்துகள்.

--

பேரறிஞர் அண்ணா மதராஸ் மாகாணத்தை “தமிழ்நாடு” என மாற்றியதைப் போல, கலைஞர் மெட்ராஸ் என்பதை “சென்னை” என மாற்றி தமிழை நிலை நாட்டினார்.

#தமிழ்நாடு_நாள்

--

“தமிழ்நாடு” என்று பெயர் மாற்றிருக்கிறோம் , பெயர் வைத்திருக்கிறோம் என்று சொல்வது பொருத்தமற்றது… ஏற்கனவே இருந்த பெயரை மீண்டும் பெற்றிருக்கிறோம் என்று சொல்வதே சரி - அண்ணாதுரை

தமிழ்நாடு தனி மாநிலமாக பிரிந்த நாள் நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள் என்ற கருத்தும் சொல்லி வருகின்றனர்.

--

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த #தமிழ்நாடு_நாள்-இல், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்!தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்!

Related Posts

View all