கொரோனா அதிகரித்தால் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும்.. தமிழ்நாட்டில் 400ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; ஒருவர் உயிரிழப்பு
2,301 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்; 198 பேர் குணமடைந்துள்ளனர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.
“கொரோனா பரவலை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2067 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு மருத்துவ துறையை முதலமைச்சர் மேம்படுத்தியிருக்கிறார் என்று - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
“இணை நோய் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. எந்த பாதிப்பு வந்தாலும் அவர்கள் இறப்பை சந்திக்க நேரிடும்”
கொரோனா தொற்று பரவல் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது
*பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும்
*சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனயீர்ப்பு
*முகக்கவசம் அணிவதில் அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் - ஈபிஎஸ்