அடுத்த சிக்ஸர்.. 75000 பேருக்கு வேலை வாய்ப்பு - 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!
இன்று 75000 பேருக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் 1.25 லட்சம் கோடி அளவிலான முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கின்றது.
தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு HIGHLIGHTS:
தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில், 14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது
தமிழ்நாட்டின் தொழில் துறையை தங்கமாக மாற்றியவர் அமைச்சர் தங்கம் தென்னரசு.
உலகின் மூலை முடுக்கெல்லாம் “மேட் இன் தமிழ்நாடு” பொருட்கள் சென்றடைய வேண்டும்.
திராவிட மாடல் மாநிலத்தை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.