இப்போது ஏன் செந்தில் பாலாஜி மீது ED ரெய்டு? அரசியல் பழிவாங்கலா என கேட்கின்றனர்.
நேற்று முழுவதும் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையின் முடிவில்
விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்ற போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் திரு செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்தில் பாலாஜி அரெஸ்ட்.. தலைவர்கள் reaction:
2024 ஆம் ஆண்டு தேர்தலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பணியாற்றினால் நோட்டாவை விடவும் நிலமை மோசமாகிவிடும் என்ற பயத்தில் இது போன்ற சோதனைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை தனது அரசியலுக்காக பாஜக பயன்படுத்துவது என்பது ஜனநாயக படுகொலையாகும்
அமைச்சர் மா.சுப்பிரமணியம்.
--
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பணியை ரத்து செய்துவிட்டு கைதாகி இருக்கும் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தது எதனடிப்படையில் - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி.
--
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?
வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?
பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.
2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
-முதல்வர் ஸ்டாலின்.